சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது;

Update: 2022-04-28 16:48 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள், உட்பிரிவு பட்டா மாற்றம், உட்பிரிவு அல்லாத பட்டா மாற்றம், நில ஆவணங்களில் பிழைதிருத்தம், இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராசசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார்கள் சிவபிரகாசம், பூங்கொடி, சம்பத், பழனி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுற்றுலாத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதன் பொருட்டு பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆம்பூர் பிரியாணி திருவிழா, ஏலகிரி மலையில் திரைப்பட திருவிழா, கோடை விழா போன்றவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, சுற்றுலா அலுவலர் கஜேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்