பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு முகாம்

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு முகாம்

Update: 2022-04-28 16:21 GMT
வால்பாறை

தமிழக உயர்கல்வித்துறை உத்தரவின்பேரில் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வால்பாறை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு சிறப்பு டாக்டர் மகேஷ் ஆனந்தி கலந்துகொண்டு பாலியல் வன்கொடுமை, அது தொடர்பான பிரச்சினைகளில் சிக்கி கொள்வது, அதில் இருந்து மீள்வது, அதை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மனதை ஒருநிலைப்படுத்தி குடும்பத்தின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும், வீட்டில் பெற்றோரிடம் மனம் விட்டு பேச வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கினார். இதில் பேராசியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்