பிரதோஷ பூஜை

பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.;

Update: 2022-04-28 16:18 GMT
அலங்காநல்லூர், 
பாலமேட்டில் சித்திரை மாத மகா பிரதோஷ பூஜைகள் அங்குள்ள சிவன் கோவிலில் நடந்தது. இதில் சுவாமிக்கு, பால், பழம், வீபூதி, சந்தனம், தீர்த்தம், வில்வ இலை, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவன் காட்சி தந்தார். சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராள மான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற் கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில்பிரகாரத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தன. இங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தது. மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சாமி-அம்பாள் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

மேலும் செய்திகள்