ரெயிலில் கடத்தி வந்த 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்தி வந்த 17 கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2022-04-28 16:07 GMT
காட்பாடி

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை காட்பாடி ரெயில் நிலையம் வந்தது.

 காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகர் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். 

அப்போது டி2 கோச்சில் கேட்பாரற்று கிடந்த 4 பைகளை சோதனை செய்தனர். அதில் 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

 இதனையடுத்து காட்பாடி ெரயில்வே போலீசார் 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்