பேரம்பாக்கத்தில் வைகுண்ட பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

பேரம்பாக்கத்தில் வைகுண்ட பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

Update: 2022-04-28 16:01 GMT
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 22-ம் ஆண்டு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்மவாகனம், நாக வாகனம், கருட வாகனம், யானை வாகனம் போன்ற பங்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கமலவல்லி தாயார் உடன் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேரானது பேரம்பாக்கம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் திருவீதி உலா சென்றது. இந்த பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பேரம்பாக்கம் கிராம பொதுமக்கள் செய்தனர்.

மேலும் செய்திகள்