4,800 கிலோ ரேஷன் அரிசி மினிலாரியுடன் பறிமுதல்

4,800 கிலோ ரேஷன் அரிசி மினிலாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-28 15:45 GMT
செங்கம்

திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கம் அருகே உள்ள ஆனந்தவாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 4,800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் மினிலாரியை பறிமுதல் செய்து, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல் ஆய்வாளர் சுந்தராம்பாளிடம் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்