அ.தி.மு.க. பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன

அ.தி.மு.க. பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-04-28 15:10 GMT
மதுரை, 
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் துணையுடன் பலருக்கு முறை கேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டுஉள்ளது. இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் அன்னபிரகாஷ், தனக்கு ஜாமீன் கோரி ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இந்தநிலையில் மீண்டும் ஜாமீன் மனுவை அவர் இதே கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்தநிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி முரளிசங்கர் நேற்று பிறப்பித்தார்.
அப்போது, மனுதாரர் திருவண்ணாமலையில் அடுத்த 30 நாட்கள் தங்கி இருந்து, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்