சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு மந்திரி நவாப் மாலிக் மனு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு நவாப் மாலிக் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு நவாப் மாலிக் மனு தாக்கல் செய்து உள்ளார்.
நவாப் மாலிக் கைது
மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பாிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. நவாப் மாலிக் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மந்திரி நவாப் மாலிக், அமலாக்கத்துறை அவரை கைது செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்து இருந்தார். அவரது மனுவை மும்பை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அமலாக்கத்துறை நவாப் மாலிக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டது.
இடைக்கால ஜாமீன்
இந்தநிலையில் அவர் இடைக்கால ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். ஏற்கனவே அவர் தனக்கு சிறுநீரக பிரச்சினை, கால் வீக்கம் இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நவாப் மாலிக் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.என். ரோகடே முன் வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
-------------