தற்காப்பு குறித்து ஆதிவாசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தற்காப்பு குறித்து ஆதிவாசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
கூடலூர்
மசினகுடி அருகே பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தற்பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை வதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தீபா கலந்துகொண்டு தற்பாதுகாப்பு மற்றும் குழந்தை வதை தடுப்பு குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து தன்னார்வலர் உமா மகேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கலாவதி ஆகியோர் பேசினர். முடிவில் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.