கூடலூரில் லாரிகளுக்கு இடையே சிக்கிய ஆட்டோ சேதம்
கூடலூரில் லாரிகளுக்கு இடையே சிக்கிய ஆட்டோ சேதம்;
கூடலூர்
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த நிலையில் ஊட்டி சாலையில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. அப்போது வாகனங்கள் நிற்கும் வகையில் போக்குவரத்து சிக்னல் செயல்பட்டது. அப்போது லாரி ஒன்று திடீரென போக்குவரத்து சிக்னலில் நின்றது. தொடர்ந்து வந்த ஆட்டோ லாரியின் பின்னால் மோதியது. இந்த சமயத்தில் ஆட்டோவின் பின்னால் வந்த மற்றொரு லாரி ஆட்டோ மீது மோதியது. இதனால் லாரிகளுக்கு இடையில் சிக்கி ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் ஆட்டோ டிரைவர் வினு (வயது 40) பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயம் அடைந்த டிரைவர் வினுவை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சேதமடைந்த ஆட்டோ அங்கிருந்து அகற்றப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.