ஊட்டியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ஊட்டியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் கலந்துகொண்டார்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதி குழு மற்றும் ஊட்டி மர்கஸ் அரபு பெண்கள் கல்லூரி சார்பில், கல்லூரியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மவ்லவி நாசர் முசலியார் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். நீலகிரி மாவட்டம் மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதி குழு தலைவர் கிருஷ்ணன், செயலாளர் முகமது அலி, மர்கஸ் அரபு பெண்கள் கல்லூரி தலைவர் சாதிக் பாஷா, செயலாளர் ஜனாப் அப்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.