ஆதரவற்ற பெண்களுக்கு ரூ80 ஆயிரம் நிதியுதவி
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ80 ஆயிரம் நிதியுதவி
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட வகை செய்யும் பொருட்டும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தையல் தொழில், சேமியா வியாபாரம், காய்கறி விற்பனை போன்ற சிறு தொழில் தொடங்க 8 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரத்தை காசோலையாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
அப்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பேபிஇந்திரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
---