கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை யொட்டி நேற்று மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தார்கள்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் புற்று கோவிலில் நேற்று மாலையில் பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.