வீட்டுமனை பட்டாக்களை அளந்து கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பட்டியலின மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை அளந்து கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-28 13:39 GMT
குடியாத்தம்

குடியாத்தம் நகர் பகுதியில் வசித்து வந்த ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2018-ம் ஆண்டு வருவாய்த்துறை சார்பில் கொண்டசமுத்திரம் ஊராட்சி கல்லேரி கிராமத்தில் 230 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. 

4 ஆண்டுகள் ஆகியும்  வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைகளை அளந்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப பட்டாக்களை உடனடியாக அளந்து கொடுக்க வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட இணைச்செயலாளர் சாமு புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.

 பேரணாம்பட்டு தலைவர் கதிரேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் தலித்குமார் தொடங்கி வைத்தார். மாநில இணைப் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 

இதில் நகர அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பாளர் தென்காந்தி, மாவட்ட துணைத்தலைவர் தமிழ், மாநில சான்றோர் அணி கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாபு பரந்தாமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்