குட்கா கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
குட்கா கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் இந்திராநகரை சேர்ந்தவர் தீபாராம் (வயது 32). இவர் குட்கா கடத்தி வந்தபோது வேலூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் தீபாராமை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் தீபாராமை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.