கோவில்பட்டி பால்காரர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கோவில்பட்டியில் பால்காரர் கொலை வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணி என்ற சுப்பிரமணி (வயது 45). பால் வியாபாரி. இவர் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யதிணேஷ் (வயது 24) என்பவரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை ஏற்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அவரை குண்டர்சட்டத்தில் ஜெயிலில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் சூர்யதினேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஆவணத்தை கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குண்டர் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.