பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
ஆரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.;
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் நகரசபை தலைவர் ஏ.சி.மணி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
நகரசபை துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் மதனரசன் பேசுகையில், ‘தற்போது நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் இதுபோல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும், ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையும், வியாபார உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வியாபாரிகள் அனைவரும் உணர்ந்து தங்களது கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், ரோட்டரி சங்கம், பட்டு சேலை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் பொறியாளர் டி.ராஜ விஜய காமராஜ் நன்றி கூறினார்.