எட்டயபுரம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது

எட்டயபுரம் பகுதியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-28 12:40 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எட்டயபுரம் அருகே நாவலக்கம்பட்டி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அருகே நின்ற 2 பேர், போலீசாரை பார்த்தும் தப்பி ஓட முயன்றனர். அந்த இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் மேல நம்பிபுரத்தை சேர்ந்த இளங்கோவன் (வயது 54), அன்புபாண்டி (37) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த பையில் 113 மதுபாட்டில்கள், மதுவிற்ற ரூ.24ஆயிரத்து 430 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் 2 பேரும் சட்டவிரோதமாக மது விற்றது தெரிய வந்தது. இதே போல், எட்டயபுரம் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் மேலவாசல் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைக்கு அருகே மது விற்றுக் கொண்டிருந்த கோவில்பட்டி வ.உ.சி. நகர் 2-வது தெருவை சேர்ந்த முத்துராமலிங்கத்தை (46) பிடித்தனர். அவரிடம் இருந்த 184 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவங்கள் குறித்து எட்டயபுரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து இளங்கோவன், அன்புபாண்டி, முத்துராமலிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்