தேனியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் முதல்-அமைச்சர் உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு

தேனியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-28 11:55 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தி.மு.க.வினர் பேச விடாமல் இடையூறு செய்ததாகவும், இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நிர்வாகிகள் சிலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து உருவப்படத்தை பறித்து தீயை அணைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்