மாணவிகள் சமூகவலைதளங்களை கவனமாக கையாள வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

மாணவிகள் செல்போன்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-04-28 11:54 GMT
தூத்துக்குடி:
மாணவிகள் செல்போன்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு
தூத்துக்குடி புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் ‘மாற்றத்தை தேடி” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அபபோது அவர் பேசியதாவது:-
போலீசில் புகார்
பெண்கள் சமூக வலைதளத்தில் தேவையில்லாமல் தங்கள் புகைப்படங்கள் சுய விவரங்களை பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலமாக நமக்கே தெரியாமல் ஆபத்தில் நாம் சிக்கி கொள்ள நேரிடலாம். இதுபோன்ற செயல்களில் நீங்கள் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் தைரியமாக போலீசில் புகார் அளிக்க முன் வரவேண்டும். உங்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தனியாக சட்டம் உள்ளது. அதை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதர வழிவகை உள்ளது. 
சமூக வலைதளத்தை...
பெண்கள், மாணவிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். செல்போன்களை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதிலும் கவனமாக கையாள்வது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புனித மரியன்னை மகளிர் கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், கல்லூரி சுயநிதி பிரிவு செயலர் ஜெயராணி, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்