மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-04-28 19:00 GMT
வலங்கைமான்:-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மாளிகை திடல் பூண்டி பகுதியை சேர்ந்த முதல் வேந்தன் மகன் மணிகண்டன் (வயது36). விவசாயி. இவர் சம்பவத்தன்று பாபநாசம் பகுதியில் இருந்து திருக்கருகாவூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வடக்கு நாயக்கன் பேட்டை பகுதி அருகே சென்ற போது சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது ஜெயலட்சுமி மீது மோதி கீழே விழுந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள  மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயலட்சுமி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்