கடைகளில் புகையிலை விற்ற 2 வியாபாரிகள் கைது

ஆரணியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-28 11:10 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. 

அதன்பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேலப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 43) என்பவரின் கடையில் 270 புகையிலை பாக்கெட்டுகளும், ஆரணி மணியம்மை தெருவை சேர்ந்த கர்ணன் (35) என்பவரின் கடையில் 23 புகையிலை பாக்கெட்டுகளும் இருந்தன. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட இருகடை வியாபாரிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்