மெரினாவை சுற்றிப்பார்க்க வந்த வியட்நாம் சுற்றுலா பயணியிடம் மணிபர்ஸ் திருட்டு - போலீசார் விசாரணை

மெரினாவை சுற்றிப்பார்க்க வந்த வியட்நாம் சுற்றுலா பயணியின் மணிபர்ஸ் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-28 10:21 GMT
சென்னை, 

வியட்நாம் நாட்டைச்சேர்ந்தவர் பார்மின் ஹியூ (வயது 46). இவர் சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ள அவர் மெரினாவை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்த அவர் விவேகானந்தர் இல்லத்துக்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் ஆட்டோ பிடித்து தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்கு திரும்புவதற்கு முடிவு செய்துள்ளார். 

ஆட்டோவில் ஏற முற்பட்ட போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வைத்திருந்த மணிபர்சை காணவில்லை. அதற்குள் ரொக்கப்பணம், வங்கி ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு போன்றவை இருந்தன. மணிபர்சை யாராவது நைசாக திருடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இது குறித்து மெரினா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்