பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு: தமிழ் தேர்வை 26 பேர் எழுதவில்லை
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வில் தமிழ் தேர்வை 26 பேர் எழுதவில்லை.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி பாட தேர்வுகள் நடைபெற்றன.
இதில் தமிழ் பாட தேர்வு எழுத 353 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர். இதில் 327 பேர் தேர்வுக்கு ஆஜராகி தேர்வு எழுதினர். 26 பேர் தேர்வுக்கு ஆஜராகவில்லை. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.