அண்ணனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய தங்கை

சகோதரனின் கழுத்தை நெரித்து கொலை செய்து இயற்கை மரணம் போன்று நாடகமாடிய தங்கை உள்பட 3 பேரை குஷால்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-04-27 21:12 GMT
குடகு:

வாலிபர் சாவு

  குடகு மாவட்டம் குஷால்நகர் அடுத்த சுந்தரநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ந் தேதி சுரேஷ் இயற்கையான முறையில் இறந்ததாக அவரது தங்கை பவ்யா, உறவினர்கள் மற்றும் சகோதரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதை கேட்டம் அனைவரும் சுந்தரநகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மகேசின் உடலை நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். 

அப்போது அவரது நண்பர் ஒருவருக்கு சுரேசின் உடலில் காயம் இருப்பதை பார்த்துள்ளார். சந்தேம் அடைந்த நண்பர் உடனே இது குறித்து குஷால்நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம சாவு என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

   இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் சுரேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் மகேசின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது மகேசின் தங்கை பவ்யா மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. 

அதில் குடும்ப தகராறில் தங்கை பவ்யாவே, அண்ணனை கொன்றதாக கூறினார்.  இதற்காக கடந்த 19-ந் தேதி மகேசிற்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்டு மகேஷ் மயங்கியுள்ளார். பின்னர் தனது உறவினரான ஹரிஷ் மற்றும் அவரது நண்பரான ஜனதா காலனியை சேர்ந்த மற்றொரு மகேஷ் ஆகியோரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். 3 பேரும் சேர்ந்து மகேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் அடைந்ததாக நாடகமாடியதாக கூறினார்.

3 பேர் கைது

  இதை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்ட போலீசார் பவ்யா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஹரிஷ், மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்