தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் மணிவேல் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.