பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு தலைக்காதலால் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார்.

Update: 2022-04-27 21:09 GMT
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தீப்பெட்டி கம்பெனி அருகில் வசித்து வருபவர் சுந்தரம். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 23). இவர் தெற்கு காடு பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி இவரது காதலை ஏற்க மறுத்தார். மேலும் அஜித் குமார் அந்த மாணவியை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளார். அதற்கு அந்த மாணவி மறுத்துள்ளார். ஒரு தலைக்காதலால் மனவேதனை அடைந்த அஜித் குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். இதையடுத்து அவர் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜித்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்