பெண்ணை கத்தியால் குத்தி தங்கச்சங்கிலி பறித்த தமிழக வாலிபர்கள்; பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்

பெங்களூரு அருகே பெண்ணை கத்தியால் குத்தி தங்கச்சங்கிலி பறித்த தமிழக வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2022-04-27 20:54 GMT
பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சூர்யநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்தப்பகுதியில் அவருக்கு சொந்தமான வீடு வாடகைக்கு இருப்பதாக அறிவிப்பு பலகை வைத்திருந்தார். இந்த நிலையில், 2 பேர் அவருடைய வீட்டுக்கு வந்து வாடகைக்கு வீடு கேட்டுள்ளனர். இதுபற்றி அந்த பெண் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேரும் கத்தியை எடுத்து பெண்ணிடம் மிரட்டினார்கள். பின்னர் அவரை கத்தியால் கத்தியால் குத்திவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். அப்போது அந்த பெண், கூச்சலிட்டுள்ளார்.

  அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள், அவர்கள் 2 பேருக்கும் தர்மஅடி கொடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தமிழ்நாடு வேலூரை சேர்ந்த சுரேஷ், கிருஷ்ணா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கத்திக்குத்து காயமடைந்த பெண்ணையும், பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்