குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

தஞ்சை அருகே கஞ்சா வழக்கில் தொடர்புடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-27 20:24 GMT
தஞ்சாவூர்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மானுத்து கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது55). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (45). இவர்களுடைய மகன்கள் சிலம்பரசன் (22), சின்னசாமி (20). இவர்கள் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பாஸ்கரன், பேச்சியம்மாள், சிலம்பரசன், சின்னசாமி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்