ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-27 20:23 GMT
விருதுநகர், 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கணேசபாண்டியன், அன்பழகன், முத்துராமலிங்கம், சின்ன மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் ராமசுப்பு தட்சிணா மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ரூ. 15 ஆயிரம் ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ. 10 ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்