முசிறியில் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம்
முசிறியில் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம்;
முசிறி, ஏப்.28-
முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி பாபு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தலைமை குற்றவியல் நடுவர்நீதிமன்ற நீதிபதி சாந்தி வரவேற்றார். திருச்சி மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் பாஸ்கரன் செயலாளர் சந்திரசேகரன், சங்க துணை தலைவர் கணேசன், கோட்டாட்சியர் மாதவன், நில அபகரிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம். அரசு வழக்கறிஞர் சப்தரிஷி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன பிரியா நன்றி கூறினார்.