எரிந்த நிலையில் முதியவர் பிணம்

அருப்புக்கோட்டை நகராட்சி மயானத்தில் எரிந்த நிலையில் முதியவர் பிணம் கிடந்தது. கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-27 20:12 GMT
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி மயானத்தில் எரிந்த நிலையில் முதியவர் பிணம் கிடந்தது. கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
நகராட்சி மயானம் 
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே நகராட்சி மயானம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த மயானத்தில் உள்ள அறையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. 
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பணிபுரிபவர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை நகராட்சி மயானத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர். 
போலீசார் விசாரணை 
 மேலும் நகராட்சி மயானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 25-ந் தேதியன்று 11.30 மணி அளவில் ஒருவர் கையில் கேனுடன் உள்ளே சென்றது பதிவாகியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இறந்து கிடந்த முதியவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ெகாலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்