கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு

ராஜபாளையம் பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update:2022-04-28 01:33 IST
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான், ஜமீன் கொல்லங் கொண்டான், புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 14 கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொல்லங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் 5 கல் குவாரிகளில் சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் கற்கள் எடுக்கப்படுகிறதா, குடியிருப்புகளில் இருந்து 300 மீட்டர் தொலைவிலும், கண்மாய், ஓடை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், விவசாயநிலத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவிலும் குவாரி இயக்கப்படுகிறதா, வெடி பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவு பயன்படுத்தப் படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்