வீடு புகுந்து தங்க நகை- டி.வி. திருட்டு

கதவை பூட்டாமல் தூங்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தங்கநகை மற்றும் டி.வி.யை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-27 20:02 GMT
திருச்சி, ஏப்.28-
கதவை பூட்டாமல் தூங்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தங்கநகை மற்றும் டி.வி.யை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கதவை தாழ்பாள் போட மறந்தார்
திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் அஜீஸ். இவருடைய மகன் முகமது ரியாசுதீன் (வயது 24). இவர் நேற்றுமுன்தினம் இரவு முன்பக்க கதவை பூட்டி தாழ்பாளை போட மறந்து தூங்கினார்.
இந்த நிலையில் அதிகாலையில் தற்செயலாக தூங்கி எழுந்தபோது, டி.வி.திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ரியாசுதீன் மற்ற பொருட்களை பார்த்தபோது, 3 கிராம் எடையுள்ள 2 தங்க மோதிரங்களும் திருடப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு ரூ.19 ஆயிரம் ஆகும்.
இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் முகமது ரியாசுதீன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்