கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் தேர்வு
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கரூர்,
உட்கட்சி தேர்தல்
தமிழகத்தில் அ.தி.மு.க. உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர்களிடம் போட்டியிடுபவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர், பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் தேர்வு
கரூர் மாவட்டத்தின் அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் தேர்வாகி உள்ளார்.
மாவட்ட அவைத்தலைவராக எஸ்.திருவிகா, மாவட்ட இணைச்செயலாளராக மல்லிகா சுப்பராயன், மாவட்ட துணைச்செயலாளர்களாக ஆர்.சசிகலா, ஆலம் கே.தங்கராஜ், மாவட்ட பொருளாளராக எம்.எஸ். கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர்களாக பி.சிவசாமி (கரூர் தொகுதி), வி.எம்.நகுல்சாமி (கிருஷ்ணராயபுரம்), எஸ்.ரவி (குளித்தலை), பி.தமிழரசி (அரவக்குறிச்சி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.