மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி

ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-04-27 19:56 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவாரப்பகுதியான செண்பகத்தோப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, அத்தி கோவில், பிளவக்கல் போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மலை பகுதிகளில் நடைபெறும் தீவிரவாத சம்பவங்களை தடுக்க சிறப்பு நக்சலைட் பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மலைப்பகுதியில் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் மலை அடிவாரப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். வள்ளியம்மை காலனியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு நக்சலைட் பிரிவு போலீசார் மாவட்ட போலீஸ் அதிகாரி மனோகர் ஆலோசனையின் பேரில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்