கன்னியாகுமரி அருகே கடிதம் எழுதி வைத்து விட்டு என்ஜினீயர் தற்கொலை

கன்னியாகுமரி அருகே கடிதம் எழுதி வைத்து விட்டு என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-27 19:56 GMT
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே கடிதம் எழுதி வைத்து விட்டு என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர்
கன்னியாகுமரியை அடுத்த மகாராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 38). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். திருமணமான இவர் மனைவியை விட்டு பிரிந்து தனது தந்தை பொன்னையாவுடன் வசித்தார்.
இந்தநிலையில் நேற்று பொன்னையா வேலைக்கு சென்றார். ஆனால் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பின்னர் வேலையை முடித்த பிறகு பொன்னையா வீடு திரும்பி உள்ளார்.
தற்கொலை
அங்கு மகனை காணவில்லை. அதே சமயத்தில் மாடியில் உள்ள அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொன்னையா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபடி உள்ளே சென்று பார்த்த போது மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அறையை சோதனையிட்ட போது, சாவதற்கு முன்பு மணிகண்டன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்