சாலை விபத்தில் 3 பேர் படுகாயம்

சாலை விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-27 19:47 GMT
கரூர்
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள கே.புதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 24). இவர் சம்பவத்தன்று தனது தந்தை வையாபுரி (45), தங்கை மஞ்சுளா ஆகிய 2 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற கார் டிரைவர் எந்தவித சைகையும் செய்யாமல் நிறுத்தியிருந்த காரை திடீரென திருப்பியபோது மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணி, வையாபுரி, மஞ்சுளா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்