முன்னாள் ராணுவ வீரர்-தாயார் மீது வழக்குப்பதிவு
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, ஏப்.28-
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்
திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரர் ஸ்டீபன். இவர் தற்போது நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சக்தாதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளான். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து காரணமாக, சக்தா தேவிக்கு ஜீவனாம்சமும் அளிக்கப்பட்டது.
2-ம் திருமணம்
இதற்கிடையில் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு, ஸ்டீபன் தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆன விஷயத்தை எல்லாம் சொல்லி, திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பால்ராஜ் பன்னீர்செல்வம் மகள் ஜாஸ்மின் ஷாபா (வயது 32) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவா்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.
இந்த நிலையில் கணவர் ஸ்டீபன் மற்றும் மாமியார் ராணி என்ற ஜாக்குலின் ஸ்டெல்லா ராணி ஆகிய 2 பேரும் சோ்ந்து ஜாஸ்மின் ஷாபாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மிரட்டியுள்ளனா். இதனால் மனமுடைந்த ஜாஸ்மின் ஷாபா பாலக்கரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். பின்னர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.
இருவர் மீது வழக்கு
அதன் பேரில், வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஸ்டீபன் மற்றும் அவருடைய தாயார் ஜாக்குலின் ஸ்டெல்லாராணி ஆகியோர் மீது 498 (ஏ), 294 (பி) மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யாதேவி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பம் தொடர்பாக ஜாஸ்மின் ஷாபா கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ஜாஸ்மின் ஷாபா நேற்று முன்தினம் உறவினர்களுடன் சேர்ந்த திருவெறும்பூர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.