திருச்சி, ஏப்.28-
திருச்சி மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளியில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட வன அலுவலர் கோபிநாத் மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை பற்றியும், காவிரி ஆற்றை பாதுகாப்பது குறித்தும் மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார். முன்னதாக சுற்றுச்சூழல் குறித்து பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் துளசி செடி வழங்கப்பட்டது.