கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுப்பு

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-27 19:38 GMT
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழடியில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே ஏற்கனவே பல வண்ணத்தில் கண்ணாடி பாசிமணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், பழங்கால செங்கல்கள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய், சிறுவர்கள், பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று தொடர்ந்து பணிகள் செய்யும் போது சிவப்பு, பச்சை கலரில் கண்ணாடி பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பணிகள் செய்யும் போது இன்னும் அதிகமாக பொருட்கள் கிடைக்கக்கூடும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்