நெல்லை:
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 64). நேற்று இரவு இவர்கள் 2 பேரும் மணிமூர்த்தீஸ்வரம் சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். வண்ணார்பேட்டை இளங்கோநகர் பகுதியில் வந்தபோது கங்கைகொண்டானில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு டவுன் பஸ் இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கந்தன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.