தூக்குப்போட்டு பெண் தற்கொலை
அருப்புக்கோட்டையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரநாகவள்ளி (வயது 41). இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தரநாகவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரநாகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.