ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-27 19:34 GMT
நெல்லை:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சிம்சன், மாநில துணைத்தலைவர் இசக்கிமுத்து, இணை செயலாளர் வானமாமலை, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் ஆசீர் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெல்லை மாவட்ட தலைவர் முத்துகுட்டி, பிரசார செயலாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்