காட்டில் கிடந்த கோவில் உண்டியல்
காட்டில் கிடந்த கோவில் உண்டியல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி கிராமத்தில் காட்டுப்பகுதியில் கோவில் உண்டியல் ஒன்று உடைந்த நிலையில் கிடந்தது. இதனை கண்டவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த கோவில் உண்டியலை கைப்பற்றினர். மேலும் அந்த உண்டியல் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும், உண்டியலை திருடி பணத்தை எடுத்து விட்டு, வெறும் உண்டியலை போட்டு சென்ற மர்ம ஆசாமிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.