அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி தாலுகா கிருங்காகோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது வகுப்பறையில் மின் விளக்கு மற்றும் மின் விசிறி இல்லாமல் கோடை காலத்தில் சிரமப்படுவதாகவும், ஆசிரியர்கள் உட்கார நாற்காலி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சொந்த நிதியிலிருந்து 20 மின் விசிறி, 20 மின் விளக்கு மற்றும் 20 நாற்காலிகள் என சுமார் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து பொன்மணி பாஸ்கரன் பேசும்போது, பள்ளியில் மாணவர்கள் ெசல்போன் உபயோகப்படுத்த கூடாது. தொழில் நுட்பத்தால் நன்மையும் விளையும், தீமையும் ஏற்படும் என்றார். இதையடுத்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட மாட்டோம் என மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், ஒன்றிய துணைதலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர் சசிக்குமார், கிருங்காகோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசியப்பன், கிருங்காகோட்டை ஊர்அம்பலம் நேருதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.