தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-27 19:14 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட பெருமாள் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்