எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த முத்து ரமேஷின் மகள் அனன்யா (வயது 15). இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டில் அனன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனன்யா தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.