நெல்லையில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க நெல்லையில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு நடந்தது.
நெல்லை:
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க என்.சி.சி. மாணவர்களுக்குக்கான ஆரம்பகட்ட தேர்வு நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான என்.சி.சி. மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். லெப்டினன்ட் கர்னல் பாபி ஜோசப் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார்.