மரங்கள் வெட்டி கடத்தல்

மணிமுத்தாறு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-27 18:58 GMT
அம்பை:
மணிமுத்தாறு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மரம் வளர்ப்பு

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மணிமுத்தாறில் பொதுப்பணித்துறை அலுவலக விருந்தினர் மாளிகை உள்ளது. அதன் அருகில் கால்வாய் செல்கிறது. 

மணிமுத்தாறு பெருங்கால்வாய், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் போன்ற இடங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வேம்பு, வாகை, அரசமரம், கருவேல மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

வெட்டி கடத்தல்

இந்த நிலையில் மணிமுத்தாறு பெருங்கால்வாய் கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சில மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச்சென்று விட்டனர். அதன் அடிப்பகுதியை மட்டும் அப்படியே விட்டுச்சென்று உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் மெர்சி ஜெசியா கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்